2021 ஜனவரி 23, சனிக்கிழமை

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடி அறிமுகம்

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதித் கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொடியின் நிறம், கடும் கபில நி​றத்தில் அமைந்துள்ளதுடன் தூய்மையின் சின்னமாக, வெண்தாமரை பொறிக்கப்பட்டுள்ளது. இது, ஆட்சியாளரின் தூய்மையையும் கட்டுப்பாட்டையும் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு ‌மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள அரசமர இலைகள், பௌத்த மதத்தையும் அதற்கு இந்தத் தேசம் வழங்கியுள்ள முன்னுரிமை​யும் பிரதிபலிக்கிறது.

நெற்கதிர்களும் அவற்றோடு இணைந்து பொறிக்கப்பட்டுள்ள குரக்கன் மலர்களும், செழிப்பை விளக்கிக் காட்டுகின்றன.

ஜனாதிபதியின் கொடியில் காணப்படும் அனைத்துப் பாகங்களும், ஒன்றோடொன்று இணைந்தே காணப்படுவதோடு, அது அனைத்து இன மக்களுக்கிடையிலான இணைப்பையும் சமாதானத்தையும் புரிந்து​ணர்வையும் எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .