2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காத அதிகாரிகள் நாட்டுக்கு திருப்பி அழைப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய தொலைபேசி அழைப்புக்கு பல சந்தர்ப்பங்களில் பதிலளிக்க தவறிய ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரியானி விஜேசேகர உள்ளிட்ட ஐவரை மீண்டும் இலங்கைக்கு அழைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் அலுவலகத்திற்கு பல முறை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எந்தவொரு அதிகாரியும் பதிலளிக்க வில்லை.

இதனையடுத்து, குறித்த தூதுவராலயத்தின் தூதுவர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X