2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அமெரிக்கா வரவேற்பு

Super User   / 2010 மே 11 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தகால நெருக்கடியான நிலைமைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு, வரவேற்கத்தக்கது என அமெரிக்க அரசாங்கம் பாராட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுசன் ரைஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் கூறினார்.

இந்த ஆணைக்குழுவின் விசாரணையானது ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் எனவும் சுசன் ரைஸ் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--