2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுள் காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

Yuganthini   / 2017 ஜூலை 25 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆயுள் காலம் 3 மாதங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தனது விசாரணைகளை ஆணைக்குழு முன்னெடுக்கும்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல்  ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளியுறவு அமைச்சருமான ரவி கருணாநாயக்கவை  ஜனாதிபதி விசாரணைஆணைக்குழுவுக்கு நாளை (26) சமூகமளிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .