Yuganthini / 2017 ஜூலை 24 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் பயணம்செய்தபோது, நல்லூர் பிரதேசத்தில் வைத்து சனிக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் பிரேமசந்திரவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தத் துப்பாக்கிப் பிரயோக, சம்பவத்தையடுத்து நீதிபதியின் பாதுகாப்பு குறித்து கவனம்செலுத்தியுள்ள ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில், விசேட பொலிஸ் குழுக்களை அமைத்து விரிவான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மறைவையிட்டு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி, தமது கடமையை சரியாக செய்கின்ற இத்தகைய அதிகாரிகள் முழு அரச சேவைக்கும் பொலிஸ் திணைக்களத்துக்கும் முன்னுதாரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி விரைவாக குணமடையவேண்டும் எனத் தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
9 minute ago
28 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
45 minute ago
51 minute ago