2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

ஜனாதிபதி நாடு திரும்பினார்;ஜி- 15இன் 15ஆவது உச்சிமாநாடு இலங்கையில்

Super User   / 2010 மே 18 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜி - 15 நாடுகளின் தலைமைப் பதவியினைப் பொறுப்பேற்று உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை நாடு திரும்பினார். இதேவேளை, ஜி- 15 நாடுகளின் 15ஆவது உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தெஹ்ரான் நகரில் நேற்று நடைபெற்ற ஜி - 15 நாடுகளின் 14ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அந்த உச்சிமாநாட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்று உரையாற்றும்போதே இந்தத் தகவலையும் வழங்கினார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட 18 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள இம்மாநாட்டின்போது நாடுகளிற்கு இடையிலான நல்லுறவு, அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

ஜி - 15 நாடுகள் அமைப்பில் ஈரான் , அல்ஜீரியா ஆர்ஜென்டினா, பிரேசில் சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஜமைக்கா, கென்யா, நைஜீரியா, மலேசியா, மெக்ஸிக்கோ, பெரு, செனகல், இலங்கை மற்றும் சிம்பாவ்வே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--