2021 மார்ச் 03, புதன்கிழமை

‘ஜனபலய’ வெற்றி பெறும் மஹிந்த நம்பிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணி எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள ஜனபலய எதிர்ப்பு நடவடிக்கையில், ஒன்றிணைந்த எதிரணியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொள்வார்களென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எந்த உறுப்பினரும் குறித்த எதிர்ப்பு பேரணியில் கலந்துக்கொள்ள மாட்டோம் என இதுவரை தனக்கு அறிவிக்கவில்லை என்பதால், இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிப் பெறும் என்றும் மஹிந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டாளர் பஷில் ராஜபக்ஸ வெளிநாட்டில் தங்கியிருப்பதால், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள மாட்டார் என்ற போதிலும், இந்த எதிர்ப்பு பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பஷில் மேற்கொள்வதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .