2025 ஜூலை 02, புதன்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணித் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 22ஆம் திகதி  நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு   பாதுகாப்பு அமைச்சின் அனுமதி  பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, ஜெனரல்  பொன்சேகா நாடாளுமன்றத்திற்கான முதல் அமர்வில் கலந்து கொள்வதற்கு   பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க முன்னர் தெரிவித்திருந்தார்

எனினும்,  தேர்தல்கள்  ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலில்  ஜெனரல் சரத் பென்சேகாவின் பெயரையும்  வர்த்தமானியில் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .