2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஜெனரல் பொன்சேகா மீதான விசாரணை நீதியாக நடத்த அமெ.வலியுறுத்தல்

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகள் நீதியாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என  அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் இவ்வாறு வலியுறுத்தினார்.

வித்தியாசமான இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்  இராணுவ நீதிமன்றத்தினால் எவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அவை இலங்கையிலுள்ள உயர் சிவிலியன் நீதிமன்றத்தினால் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகள் சட்டத்திற்கு ஏற்ப இடம்பெற வேண்டும் எனவும் றொபர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.

இதேவேளை,  'உண்மைகளை கற்றுக்கொள்வது மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டமைக்கு றொபர்ட் ஓ பிளேக் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--