2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஜனவரி 8 சூழ்ச்சி குறித்து முறைப்பாடு உள்ளது

Thipaan   / 2016 மார்ச் 09 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

'2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று, தேர்தல் பெறுபேறுகளை நிறுத்துவதற்கான சூழ்ச்சியொன்று மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் விடயம் குறித்து விசாரிக்குமாறு, முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது' என சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பிலவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'தேசிய பாதுகாப்புக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்து என்பதால், 2015 ஜனவரி 8ஆம் திகதி இரவு, ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை இடைநிறுத்துவதற்கான சூழ்ச்சி பற்றி, அமைச்சர் மங்கள சமரவீரவினால் 2015.01.14 அன்று புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேற்படி புலனாய்வு பற்றிய அறிக்கை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு 2015 ஜனவரி 16ஆம் திகதியன்று அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமா அதிபரின் காலதாமத்தால் இவ்வாறான சுணக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் சட்டமா அதிபர் செயற்பட்ட விதத்தினால் இவ்வாறான தாமதம் ஏற்பட்டது' என்றார்.

குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, 'வெளிவிகார அமைச்சர் என்பதனால் இந்த விவாதத்துக்கு முன்னுரிமை கொடுத்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க இயலாதா?' என்று வினவினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .