2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

இருதரப்பு பேச்சுக்காக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கா விஜயம்

Super User   / 2010 மே 21 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இரு நாட்டு அரசாங்களுக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனையும் அமைச்சர் சந்தித்து உரையாற்ற எதிர்ப்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் தகவல் பிரிவொன்று தெரிவித்தது.

இதேவேளை இலங்கை மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அமெரிக்க அரசாங்கத்திடம் அமைச்சர் விளக்கமளிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகளின் போது இராணுவத்தினர் போர் குற்றங்களைப் புரிந்தனர் என்று சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்த சர்வதேச சமூகம் எத்தனித்துள்ளது.  

இந்நிலையிலேயே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் விஜயம் அமெரிக்காவுக்கான இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • xlntgson Saturday, 22 May 2010 08:21 PM

    கிளிண்டனின் ஆதரவை பெற்றதனால் மட்டுமே பேராசிரியர் பேச்சில் வென்று விட முடியாது. இதற்கு முன்பு இருஅரசியல் கட்சிகளை சார்ந்தும் இவரால் என்ன சாதிக்கமுடிந்தது? அழகுப்பேச்சல்ல எடுபடும் நேர்மையும் சொன்ன சொல்லை காப்பாற்றுவதும் தான் உண்மையான அழகு; அரசுக்கு தேவைப்படுகிற மாதிரிஎல்லாம் திரித்து சொல்லுவது கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் முன் சொன்னதை மறுப்பது அல்லது வேறு அர்த்தம் சொல்லுவது எல்லாம் என்ன இராஜதந்திரமோ தெரியவில்லை! அரச பேச்சாளர் போன்ற பதவியல்ல இராஜதந்திர பேச்சாளர். நல்லதே நடக்கட்டும் என்று விழைகிறோம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .