2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஜி.எஸ்.பி சலுகையை வழங்குமாறு ஆலோசனை -ஐரோப்பிய ஒன்றியம்

Super User   / 2010 ஜூன் 22 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரையறுக்கப்பட்ட கால எல்லைக்கு இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றிய பேரவைக்கு ஆலோசனை வழங்கத் தயாராகவிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.

இலங்கை அரசாங்கம் சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே சலுகைத் திட்டத்தை நீடிப்பது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டது.

மனித உரிமைகள் விடயம்  தொடர்பில் சில முக்கிய நிபந்தனைகளுக்கு இணங்குவதாக இலங்கை அரசாங்கம் எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டுமென இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அறிவித்துள்ளது.

6 மாத காலத்திற்குள் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதாக உறுதியளிக்க வேண்டும் எனவும், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த நிபந்தனைக் காலம் ஆரம்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--