2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஜி.எஸ்.பி வரிச்சலுகை விலக்கப்படும் பட்சத்தில் மாற்று திட்டம்-ஜீ.எல்.பீரிஸ்

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படும் நிபந்தனைகளை கடைப்பிடிக்காதவிடத்து இலங்கைகான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை அது விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இலங்கை அதனை சமாளிப்பதற்கான மாற்றுத் திட்டமொன்றை தன்னகத்தே கொண்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்தது.

ஊடகவியலாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவர் இதனைக் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது வைக்கப்பட்ட நிபந்தனைகளானது எதிர்கட்சி உறுப்பினர்களான ரணில் விக்கிரமசிங்ஹ, கரு ஜயசூரிய, ரவூப் ஹகீம், மனோ கணேசன் ஆகியோரால் எழுப்பப்பட்ட நிபந்தனைகளைப் போன்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை அமைச்சரவை நிராகரித்திருப்பதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--