2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

ஞானசாரரைக் கைது செய்யும் முயற்சி தோல்வி

Gopikrishna Kanagalingam   / 2017 மே 21 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, குருநாகலில் பதற்றமான சூழ்நிலையொன்று, நேற்று இரவு ஏற்பட்டது.

முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கான பாதையை, பொலிஸார் மறித்ததாகவும் அந்தப் பகுதிக்கு பொது பல சேனாவின் உறுப்பினர்கள் வந்த போது, ஞானசார தேரரைக் கைது செய்ய முயன்றதாகவும், பொது பல சேனா தெரிவித்தது.

ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான முயற்சியை, பொது பல சேனாவும் அதன் ஆதரவாளர்களும் எதிர்த்தனர் என்று அறிவிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் ஞானசார தேரருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அதன்போது, பிரதமரையும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் கீழ்த்தரமமாகக் கதைத்தாகக் கூறப்படுகிறது

முறைப்பாடொன்று சம்பந்தமாக, ஞானசார தேரரைக் கைது செய்து, அவரின் வாக்குமூலம் பெறவே முயன்றதாக, பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையில், சுமார் 200 பொலிஸார் ஈடுபட்டதாக, பொது பல சேனா தெரிவித்தது.

இந்நிலையில் தேரர், பொலிஸாரிடம் இன்று (21) ஆஜராவதாக வாக்குறுதி அளித்தாகவும் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
Tweets by Tamilmirror

X

X