2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

டக்ளஸுக்கு எதிராக 50 கோடி ரூபா மான நஷ்ட ஈடு கோரி வழக்கு - விஜயகலா

Super User   / 2010 ஜூலை 03 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக 50 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளார்.

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார். 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு எதிராக அபாண்டமாக குற்றம் சுமத்தி வருவதாகவும் அவர் தமிழ்மிரர் இணையதளத்திடம் கூறினார்.

யாழ்ப்பாணம்,நல்லூரில் நிறுவப்பட்டிருந்த  தியாகி திலீபனின் சிலை உடைப்புக்கு விஜயகலா மஹேஸ்வரனே காரணம் என உள்நாட்டு,வெளிநாட்டு ஊடகங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிவருகின்றார்.

நாடாளுமன்றத்தில் வரவு,செலவுத்திட்ட  உரை மீதான விவாதம் முடிவடைந்ததும் தாம் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் விஜயகலா மஹேஸ்வரன் தமிழ்மிரர் இணையதளத்திடம் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0

 • xlntgson Saturday, 03 July 2010 07:45 PM

  வழக்குகள் இலங்கையில் முடிவடைவதில்லை இலேசில், இடையில் சமாதானம் செய்துகொள்வதில் சென்று முடிவடையும்! இப்போதே எனது ஆருடம், எதிர்வு, ஊகம்!

  Reply : 0       0

  wasantha kumar D Sunday, 04 July 2010 01:40 AM

  வாழ்த்துக்கள்.
  அமரர் மகேசனின் மனவலிமையை உங்களிள் காண mudegerathu.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--