2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

டோர்ச் லைட்டுடன் அவைக்கு வந்தார் எம்.பி

Kanagaraj   / 2016 மார்ச் 23 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

அவைக்கு, டோர்ச் லைட்டுடன் நேற்றுப் புதன்கிழமை வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி, டோர்ச் லைட் வெளிச்சத்தை அங்கும் இங்கும் பாய்ச்சினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அமைச்சின் கூற்றொன்றை விடுத்து உரையாற்றினார்.

அவரது உரையின் நிறைவில் எழுந்த, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர  ஜயக்கொடி, 'மின்சாரம் தடைப்பட்டமையால் மக்கள், பல்வேறான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். அதனை நிவர்த்திக்க, அரசாங்கத்திடம் போதியளவான வேலைத்திட்டம் இல்லை. என்னிடம் வேலைத்திட்டம் இருக்கின்றது. அதாவது, இந்தமாதிரியான டோர்ச் லைட்டை வழங்கலாம்' என்று கூறி, அந்த டோர்ச் லைட்டின் ஒளியை அவைக்குள் அங்குமிங்கும் பாய்ச்சினார். இதன்போது குறிக்கிட்ட மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க பிரதியமைச்சர் அஜித்.பி.பெரேரா, இந்த அவையில் இன்று மட்டும்(நேற்று) சபாநாயகரின் அனுமதியின்றி மூன்று தடவைகள் ஒலிவாங்கி முடுக்கி விடப்பட்டது. சபாநாயகர் அனுமதியளித்தால் மட்டுமே ஒலிவாங்கி முடுக்கி விடப்படும். அந்தச் சம்பிரதாயம் மீறப்பட்டுள்ளது' என்று சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .