2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

தென்னந்தோப்பில் யானைகள் அட்டகாசம்

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(வி.சுகிர்தகுமார்) 

அம்பாரை - ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புட்டம்பை கிராமத்தில் அமைந்துள்ள தென்னந் தோப்பினுள் நேற்றிரவு(06) நுழைந்த யானைகள் கூட்டம், அங்கிருந்து தென்னங்கன்றுகளை நாசம் செய்துள்ளன.

தென்னந் தோப்பினுள் நுழைந்த யானைகளை விரட்டியடிக்க பிரதேச மக்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோது, யானைகள் மக்களைத் தாக்க முயற்சித்துள்ளன.

தென்னந் தோப்பொன்றை உருவாக்க 10 வருடங்களாகுமெனத் தெரிவித்துள்ள குறித்த தென்னந்​ தோப்பின் உரிமையாளர், ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் உரியத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .