2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

'தனியார் மருந்துவ கல்லூரி அமைக்க 15 விண்ணப்பங்கள்’

Yuganthini   / 2017 ஜூன் 13 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் மருந்துவ கல்வி நிறுவனங்களை அமைப்பது தொடர்பில் 15 விண்ணப்பங்கள், சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சபைக்கு கிடைத்துள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே, நேற்று (12) தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 1980ஆம் ஆண்டு, 100க்கு மேற்பட்ட அரச கல்வி நிறுவனங்கள் காணப்பட்டதுடன், எந்தவொரு தனியார் மருந்துவ கல்வி நிறுவனங்களும் காணப்படவில்லை.

ஆனால் 30 வருடங்களின் பின்னர் 200க்கு மேற்பட்ட தனியார் மருந்துவ கல்வி நிறுவனங்கள் காணப்படுவதுடன் 183 அரச மருந்துவ கல்வி நிறுவனங்கள் தற்போது செயற்பாட்டில் உள்ளன.

ஆனால், உலக நாடுகள் இந்திய வைத்தியர்களை சேவைக்கு கோருவதை மிகவும் குறைந்து வருகின்றன. இதற்கு காரணம் அதிகளவாக தனியார் மருந்துவ கல்வி நிறுவனங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றமையே ஆகும். இத்தகைய நிலமை இலங்கைக்கும் ஏற்படக்கூடும் என, உதவி செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X