2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் நூல் வெளியிட வேண்டும்;சிவத்தம்பி

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தமிழ் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளும் வகையில் நூலொன்றை வெளியிடுவதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி கோரிக்கை விடுத்தார்.

கோவையில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

உலகம் முழுவதிலும் பரவியிருக்கும் தமிழ் மொழி செம்மொழியாக பரவியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழை மேம்படுத்த இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் என்றும் கா.சிவத்தம்பி குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--