Menaka Mookandi / 2016 மார்ச் 11 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொல்லஹேன்கொட எலன் மெதினியாராம விகாரையின் விகாராதிபதி உடுவே தம்மாலோக்க தேரரை பிணையில் விடுவிக்க, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இன்று அனுமதி வழங்கினார்.
60 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகள் தேரரை விடுவிக்குமாறும் பிணை வழங்குவோரின் இருப்பிடத்தை உறுதி செய்யுமாறும் பிணையில் சென்ற பின்னர், சாட்சியாளர்களை தொந்தரவுக்கு உட்படுத்தக்கூடாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
யானைக்குட்டியொன்றை சட்டவிரோதமான முறையில் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026