2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தயா கமகே நியமனம் : முஸ்லிம் காங்கிரஸை ஐ.தே.க ஏமாற்றியதா?

Super User   / 2010 ஜூன் 10 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவராக தயா கமகே ஐக்கிய தேசிய கட்சியால் நியமிக்கப்பட்டமை சம்பந்தமாக எதுவும் தெரியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

கடந்த மாதம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் நியமனம் சம்பந்தமாக  ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவுடன்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டது.

எனினும் அவர்கள் இருவருக்கும் இடையில் இது சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெறவில்லை என நான் நினைக்கின்றேன் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி .

மேலும், இது சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சி  எவ்வித பேச்சுவார்த்தையிலும் முஸ்லிம் காங்கிரஸுடன் ஈடுபடாமல் நியமித்துள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று  முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவராக தயா கமகே நியமிக்கப்பட்டமை தமிழ்மிரர் இணையத்தளம் தன்னிடம் தொடர்புகொண்டு வினவிய போதே தெரியவந்ததாக ஹசன் அலி குறிப்பிட்டார்.(R.A)


  Comments - 0

 • mohamad Friday, 11 June 2010 12:49 PM

  யார் நியமிக்கப்பட்டால் தான் என்ன நடக்கும். இவ்வளவு காலமும் எதிர்க்கட்சி தலைவராய் இருந்து எதை கிழித்தார்கள். ஹக்கீமிடம் கேட்க தேவை இல்லை. எல்லாம் ஒரு கட்சிதான். முஸ்லிம் காங்கரெஸ் யானையின் வயிற்றினுள் போயாச்சு!

  Reply : 0       0

  koneswaransaro Friday, 11 June 2010 09:48 PM

  தனிப்பட்டவர்களுக்கு பட்டம் பதவி சொகுசுகள் கிடைப்பதைத் தவிர கிழக்கு மாகாண சபையால் யாருக்கு என்ன லாபம்? இதற்கு இனபேதம் கட்சி பேதம் ஏன்?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--