Kamal / 2020 ஜனவரி 04 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக யார் தெரிவானாலும் அதன் தோல்வி உறுதியாகிவிட்டதென தெரிவிக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தலை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ போன்ற தூரநோக்கு இல்லாத தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவானதில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்திய நடத்திய போதும் அக்கட்சியின் மக்கள் ஆதரவு மொட்டின் வசமானது என்றும் தெரிவித்தார்.
அதேபோல் எப்போது தேர்தல் நடந்தாலும் அக்கட்சியின் தோல்வி உறுதியென தெரிவித்த அவர், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்க மூன்றிலிரண்டு ஆதரவை பெற்றுகொடுக்க தயாரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறி வருவதாகவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துவதற்கு அந்த ஆதரவை பெற்றுதர வேண்டுமெனவும் கோரினார்.
அதேபோல் ஐ.தே.க மூன்று பிரிவுகளாக காணப்படுகின்றதென தெரிவித்த அவர், அக்கட்சியின் உட்பூசல்கள் காரணமாக தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அக்கட்சி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
28 minute ago
1 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
5 hours ago
9 hours ago