2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

திரைப்பட தயாரிப்பாளர் சந்திரன் ரட்னம் பொலிஸாரினால் கைது

Super User   / 2010 மே 30 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரைப்படத் தயாரிப்பாளரும், பணிப்பாளருமான சந்திரன் ரட்னம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் வெடிபொருள்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சந்திரன் ரட்னம் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.

சந்திரன் ரட்னம் கைது செய்யப்பட்டதை அவரின் உறவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்திரன் ரட்னம் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

சந்திரன் ரட்னம்  இலங்கையின் யுத்தத்தை மையமாக வைத்து 'ஆனையிறவுக்கான பாதை' என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .