2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

’தலைமை பொறுப்பை துறக்க ரணில் இணக்கம்’

Editorial   / 2019 நவம்பர் 26 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச, பெரும்பாலும் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஐதேக/ஐதேமு கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று (26) அல்லது நாளை (27) நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தொடர்பிலும் முடிவு செய்யப்படும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தமது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .