2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

தெஹிவளையில் ரூ. 3 இலட்சம் பெறுமதியான பணம் நகைகள் திருட்டு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 09 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆனந்த வீரசூரிய)

தெஹிவளையிலுள்ள பிறைசர் அவனியு வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் திருடிச்செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை இரவு குறித்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாத நேரத்தில்  பின் நுழைவாயிற் கதவை உடைத்துக் கொண்டு  திருட்டுக் கும்பலொன்று திருட்டுச் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

வீட்டின் உரிமையாளர் மேற்படி திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இக்கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கையில் விசேட பொலிஸ் குழுவொன்று ஈடுபட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .