2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

திருப்பதிக்குச் செல்கிறார் பிரதமர்

Gavitha   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 22ஆம் திகதி, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.   தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பயண நிரலில், பிரதமர ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 21ஆம் திகத சென்னைக்குச் செல்வார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னையிலிருந்து திருப்பதி விமான நிலையத்துக்குச் செல்வதற்கு 130 கிலோமீற்றர் தூரத்தை கடக்க வேண்டும் என்பதனால், பிரதமர், ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம், திருப்பதி விமான நிலையத்தைச் சென்றடையவுள்ளார்.

மலைக்கோவிலில் வழிபாடுகளை முடித்துக்கொள்ளவுள்ள பிரதமர், அன்றைய தினமே இலங்கைக்குத் திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .