2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

நாகரிகமற்ற விளம்பரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Super User   / 2010 ஜூலை 01 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகர் பகுதிகளில் நாகரிகமற்ற முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றுமாறு வழங்கப்பட்ட மூன்று வாரகால காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், அகற்றப்படாமல் தொடர்ச்சியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பர  உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக  பொலிஸ் திணைக்கள் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவிக்கித்தன.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தை ஒன்று கடந்த மாதம் விளம்பர உரிமையாளர்களுடன் இடம்பெற்றது. அதன் போது அநாகரிகமற்ற விளம்பரங்களை அகற்றுவதாக உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அகற்றப்படாமல் உள்ள விளம்பரங்களை பொலிஸார் அடுத்த வாரம் அகற்றுவார்கள் என பொலிஸ் திணைக்கம் தெரிவிக்கின்றது.

இதேவேளை பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளில் வெளியாகும் நாகரிகமற்ற விளம்பரங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் திணைக்கள் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .