2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

நீதிமன்ற உத்தரவை மீறியும் புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் போராளிகள்

Super User   / 2010 ஜூன் 17 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் பலர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் சார்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார்.

சந்தேக நபரான செல்வராசா டிலான் என்பவரை கடந்த மே மாதம் 20ஆம் திகதி அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமுக்கு புனர்வாழ்வுக்காக அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அவர் இன்னமும் அனுப்பப்படவில்லை என்றும் மேற்படி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி மேற்படி இராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்கு நீதிவான் ஆர்.இளஞ்செலியன் உத்தரவிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .