2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நானுஓயா ரயில்வே திணைக்கள ஓய்வு விடுதி குறித்து முறைபாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயாவில் உள்ள ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான ஓய்வு விடுதி கட்டடமானது, சட்டவிரோதமாக, வெளியாள் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ரயில்வே தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பானது, ரயில்வே பொதுமுகாமையாளரிடம் இன்று  (10) முறைபாடு செய்துள்ளன.

குறித்த ஓய்வு விடுதி கட்டடம் ரயில்வே திணைக்களத்தக்கு, கருங்கல்லை விநியோகிக்கும், ஒப்பந்தக்காரர் ஒருவருக்கே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை செய்யச் சென்ற ரயில்வே அதிகாரிகளை குறித்த ஒப்பந்தக்காரரின் அடியாட்கள் சிலர் எச்சரித்துள்ளனரெனவும் ரயில்வே தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

12 அறைகளைக் கொண்ட இந்த விடுதியை ரயில்வே திணைக்களம் வாடகைக்கு வழங்குமாயின், மாதாந்தம் 18 இலட்ச ரூபாயை வருமானமாகப் பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் தற்போது வெளியாள் ஒருவருக்கு இந்தக் கட்டடம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமையால், ரயில்​வே திணைக்களத்துக்கு கிடைக்க வேண்டிய வருமானம் இல்லாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதான ரயில் நிலைய அதிபர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்படாமல், வாடகை விடுதியில், ரயில்வே அதிகாரிகள் சிலருக்கு விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள இச்சங்கம் வர்த்தகர்களுக்கு இந்த விடுதி கட்டடத்தை சட்டவிரோதமாக வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை எடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--