2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பிக்கவையும் தாக்கும்

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிய சம்பவமொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வின் போது, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறினார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குச் சமாந்தரமாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அழகப்பெரும கூறினார்.

கூட்டு எதிரணியின் குழுக் கூட்டத்தின் போது, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களாலும் அனுமதி பெறப்பட்டது என டலஸ் அழகப்பெரும மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .