2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

நியூசிலாந்திடமிருந்து 30 மில்லியன் ரூபாய் நிவாரணம்

George   / 2017 மே 30 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நியூசிலாந்து அரசாங்கம் 30.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்களை பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது.

செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக இந்த நிவாரண பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்​கையின் தற்போதைய நிலை தொடருமாக இருந்தால், எதிர்வரும் நாட்களில் மேலதிக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூசிலாந்து வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .