2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு மோதல்; சந்தேக நபர்கள் அனைவரும் கைது

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, பெரியமுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தமது சட்டத்தரணிகளின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் இன்று (10) சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, குறித்த ஏழு பேரையும் நீதிமன்றில் நாளை (11) முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .