2021 மார்ச் 04, வியாழக்கிழமை

நீர் நிலைகளில் கடல் நீரைக் கலக்க நடவடிக்கை

Editorial   / 2017 ஜூலை 12 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள வடிகான்கள், கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில், கடல் நீரைக் கலந்துவிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   

நீர்கொழும்பு பிரதேசத்தில், டெங்கு நோய்த் தொற்று, கட்டுப்பாட்டு எல்லையையும் விட தாண்டியுள்ளமையை கருத்திற்கொண்டே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  

இதன் முதற்கட்ட நடவடிக்கை, நீர்கொழும்பு - பெரியமுல்லை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

இப்பிரதேசத்திலுள்ள வடிகான்கள் மற்றும் கால்வாய்களில் தற்போது பாரியளவிலான கடல் நீர் கலக்கப்பட்டு வருகிறது.   

கடல் நீர் உப்புத்தன்மையைக் கொண்டுள்ளதால், இதன்மூலம் டெங்கு நுளம்புகளையும் நுளம்புக் குடம்பிகளையும் பெரும்பாலும் அழிக்க முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளதால், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, நீர்கொழும்பு அபிவிருத்தி மன்றத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் சீ.ஜே. இயன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.  

இந்த நடவடிக்கைகள், கிரமம் கிரமமாக நீர்கொழும்பின் ஏனைய அனைத்துப் பகுதிகளுக்கும் துரிதமாக எடுத்துச் செல்லப்படும் எனவும் வடிகான்கள், கால்வாய்கள், நீர் நிலைகள் என்பன பாரியளவில் பரீட்சிக்கப்பட்டு, அவற்றுள் கடல் நீரைப் புகுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .