2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் சூடு: துப்பாக்கிதாரி அடையாளங்காணப்பட்டார்

எம். றொசாந்த்   / 2017 ஜூலை 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் பின் வீதியில் நேற்று மாலை 5.10 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில், குறித்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்திய துப்பாக்கிதாரியை தாம் அடையாளம் கண்டுள்தாகவும் , துப்பாக்கிதாரி, புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் எனவும்  அவர் மீது கொலை வழக்கு ஒன்று நீதிமன்றில் நிலுவையில் உள்ளதெனவும் குறித்த நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் அனலைதீவைச் சேர்ந்த இருவர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .