2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு

Menaka Mookandi   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச ரீதியில் முறைப்பாடொன்றைச் செய்வதற்கு கூட்டு எதிரணியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகருக்கு, இன்று புறப்பட்டுச் செல்லவுள்ளனர் என்று தெரியவருகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டீ சொய்சா, 'நாடாளுமன்றத்துக்குள் கூட்டு எதிரணிக்குரிய வரப்பிரசாதங்களை வழங்க, நல்லாட்சி அரசாங்கம் தவறியுள்ளது. எம்.பி.களுக்கான வரப்பிரசாதங்களை வழங்காமல் ஜனநாயக விரோதமாகச் செயற்பட்டு வரும் இந்த அரசாங்கம் தொடர்பில் சர்வதேச நாடாளுமன்றத்தில் முறைப்பாடு செய்ய கூட்டு எதிரணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காகவே, மேற்படி குழு, இன்று ஜெனீவா செல்கிறது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .