2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

நளினி தொடர்ந்த வழக்கு நிறைவு; முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசிடம்

George   / 2016 ஜூலை 20 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னை சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் தமிழக அரசு முடிவெடுக்கலாம்' எனக் கூறி குறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிறைவுக்கு கொண்டுவந்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணண நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்த விசாரணையின் முடிவில் 'தம்மை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரும் நளினி மனு மீது, ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யக் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுக்கலாம்' என உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதிபதி சத்தியநாராயணா கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .