2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

நாளை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழா

Super User   / 2010 ஜூன் 21 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதமுனை ஸம்ஸ்  மத்திய கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழா நாளை காலை 10.00 மணிக்கு இடம்பெறவிருப்பதாக கல்லூரி அதிபர் எஸ்.எல்.எம். ஜலாலுதீன் சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

மேலும், இப்பாடசாலையின் மீள் கட்டுமான பணிகளுக்கு முழுமையான நிதியுதவியை யுனிசொப் நிறுவனம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

நாளை இடம்பெறவுள்ள திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக யுனிசொபின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பிலிப்பே டுஆ முல்லே மற்றும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.நிஸாம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது மருதமுனை ஸம்ஸ்  மத்திய கல்லூரி முழுமையான சேதத்திற்குள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--