2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

நாமலுக்கு பிடியாணை

Menaka Mookandi   / 2016 ஜூலை 28 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால், பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்று (28) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'ஹெலோ கோப்' நிறுவனத்திடமிருந்து 125 மில்லியன் ரூபாய்கான பங்குகளைக் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே, நாமல் உள்ளிட்ட அறுவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்காக, நாமல் ராஜபக்ஷவுக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் அதனால், அவர் உள்ளிட்ட அறுவர் மீது, பணச் சலவைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கூறியே, இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X