2021 ஜனவரி 27, புதன்கிழமை

'நாமலை கைது செய்ததில் சந்தோஷமில்லை'

Niroshini   / 2016 ஜூலை 13 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாமலை கைது செய்தமை எம்மை பொறுத்தமட்டில் கவலைக்குரிய விடயம் என்றே கூறவேண்டும் என மின்சக்தி எரிபொருள்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை கைது செய்தமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'தற்போது சந்தோஷமா' என அரசாங்கத்தைப் பார்த்து கேட்டுள்ளார்.

உண்மையில் நாமலை கைது செய்தமை எம்மை பொறுத்தமட்டடில் கவலைக்குரிய விடயம் என்றே கூறவேண்டும்.

நாட்டின் சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அதன்படியே நாமல் ராஜபக்ஷவின் விவகாரத்திலும் அரசாங்கம் செயற்பட்டுள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .