2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

நிஷாந்தவுக்கு பிணை வழங்குவதில் சிக்கல்

Menaka Mookandi   / 2016 மார்ச் 16 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நிதி கிடைத்த விதம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு தவறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

அவரது பிணை மனு மீதான விசாரணை, இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, பிணைச் சட்டத்தின் பிரகாரம், அவருக்கு பிணை வழங்க முடியாது என தெரிவித்த நீதிபதி எம்.சி.பீ.எஸ்.மொராயஸ், பிணை தொடர்பான முடிவினை கடுவெல நீதவான் நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன், அவரை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்க முடியாது என்றும் குறிப்பிட்ட நீதிபதி, இம்மனு தொடர்பான தீர்மானத்தை எடுக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றத்துக்குப் பணித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .