Kamal / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து அமைச்சரவையே தீர்மானிக்குமென தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனியார் போக்குவரத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்தாகவும் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சின் கேட்போர்கூடத்தில் நாளை புதன்கிழமையன்று மேற்படி பேச்சுவார்த்தை இடம்பெறுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஸ் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் எதிர்வரும் 24 ஆம் திகதி வேலைநிறுத்தத்துக்கு செல்வதாக தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் எச்சரித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனியார் போக்குவரத்து சங்கங்களின் நிலைப்பாட்டையும் கருத்திற் கொண்டு பஸ் கட்டண அதிகரிப்பு குறித்த அறிக்கையொன்றை அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago