2025 ஜூலை 02, புதன்கிழமை

பங்களாதேஷுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷுக்கு நிவாரண உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, வௌ்ள நிவாரண நிதியாக 50 ஆயிரம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஜுலை மாதம் தொடக்கம் பங்களாதேஷில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு இந்த நன்கொடை வழங்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .