2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

பச்சிலைப்பள்ளியில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட கோரிக்கை

Super User   / 2010 மே 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டமொன்றை ஏற்படுத்தித் தருமாறு அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியேறியவர்கள் மற்றும் அவர்களுக்கான அபிவிருத்திகள் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறான கோரிக்கையை முன்வத்தார்.

இப்பிரதேச செயலாளர் பிரிவில், புலோப்பளை மேற்கு, கிழக்கு, தர்மக்கேணி, பளை நகரம், தம்பகாமம், சோரன்பற்று, மாசள், அரசர்கேணி ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் 1,393 குடும்பங்களைச் சேர்ந்த 4,437பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--