2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பண்டிகைக் காலத்தில் மின்சாரம் தடைப்படாது

Princiya Dixci   / 2016 மார்ச் 30 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தினை தடையின்றி முற்று முழுதாக வழங்க எதிர்பார்த்துள்ளோம் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

மின்சார நெருக்கடி மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 

'நாட்டில் மிகக்குறுகிய கால இடைவெளியில் மூன்று முறை மின்சாரத் தடை ஏற்பட்டதுடன், வரட்சியான காலநிலையும் காணப்பட்டது. 

'இவற்றையெல்லாம் கடந்து அனைத்தினையும் சரி செய்யும் வகையில் தற்போதய அரசாங்கம்  என்ற வகையில் நாம் முயற்சித்து வருகின்றோம். 

'சூரிய மின் கலங்களை வழங்கவும் உத்தேசித்துள்ளோம். ஆனால், நாம் பொதுமக்களின் நலன்களை சிந்தித்து பல்வேறு மாற்றுவழிகளினுடாக மின்சாரத்தைச் சேமிக்க முயன்று வருகிறோம்' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .