2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

புதிதாக பிறந்த குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்

Super User   / 2010 மே 15 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக பிறந்த குழந்தைகள் பாதாள உலகக்கோஷ்டியினரால் தூக்கிச்செல்லப்பட்டு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.

மாளிகாவத்தை பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் மேற்படி குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டது.

இந்த நிலையில் மாளிகாவத்தை பகுதியில் 25 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாகவும் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.
  Comments - 0

 • nuah Saturday, 15 May 2010 10:03 PM

  இது வெகுகாலமாகவே நடந்து வருகின்றது. மருத்துவ தாதிகள் பொலீஸ் துணையுடன் வெளிநாட்டவருக்கு- இளம் தாய்மார்களுக்கு கிடைக்கும் காதல் குழந்தைகளுக்கு அவற்றை கொல்லாமல் மானமும் காப்பாற்றப்பட உதவுவது போல் நடித்து வளர்க்க தத்து எடுக்க மருத்துவர்களே உதவியாக இருந்து 'விற்றனர்' என்று கேள்வி, இப்போது பாதாள உலகம் என்று போடுகின்றனர் அவ்வாறாயின் பொலீஸ்/இராணுவத்தில் ஓடிவந்தவர்கள் தொடர்பும் இருக்கலாம் பாதாள உலகம் என்று சுறாக்களையும் திமிங்கிலங்களையும் காப்பாற்றுவது பொலிசுக்கு சகஜமே! அரசு, தலைமை, பெற்றோர் கவனத்துக்கு.

  Reply : 0       0

  srikant Saturday, 15 May 2010 10:11 PM

  விற்பது என்றுதான் கடைசியில் வரும். ஆனால் அந்த பெண்ணுக்கு, உனக்கு செலவுக்கு பணம் எப்போது வேண்டுமானாலும் குழந்தையை பார்க்கலாம் நல்ல இடத்தில் வசதியாக வாழும் என்றெல்லாம் ஆசை காட்டி பின்னர் எமாற்றப்பட்டபின்னர்தான் இவர்கள் பொலீசுக்கு போகின்றார்கள். ஒரு பொலீஸ் செய்யும் தவறை இன்னொரு பொலீஸ் மாட்டினால் இவை இல்லாமல் போய்விடும். போலீசுக்கு பொலீஸ் உதவிதான் இல்லாவிட்டால் இந்த மாதிரி செயல் அறவே இல்லாமல் செய்துவிட முடியும். மத பிரச்சாரங்களும் இன உணர்வுகளும் கூட இதில் நுழையும். அந்த சாதிக்காரர்கள் அப்படித்தான் என்பர்.

  Reply : 0       0

  xlntgson Sunday, 16 May 2010 08:33 PM

  பாதாள உலகமா? அப்படி என்றால் பொலீசில் விலக்கப்பட்டவர்களுடையவும் இராணுவத்தில் ஓடி வந்தவர்களுடையவும் சம்பந்தம் இல்லாமல் இருக்காது!

  Reply : 0       0

  sheen Thursday, 20 May 2010 09:31 PM

  இதில் அரசியல்வாதிகள் யாரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லையா? புதினம் தான்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--