2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

புத்தளம் ஆனமடுவை பகுதியில் மாணவன் தாக்கி சக மாணவன் உயிரிழப்பு

Super User   / 2010 ஜூன் 11 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் ஆனமடுவை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய  மாணவனின் தலையை பிடித்து சக மாணவன்   குழாய் கிணற்றில் தாக்கியதால் காயத்திற்குள்ளானவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான மாணவன் குறித்த மாணவனின் கழுத்தை நெரித்துள்ளார். அத்தோடு குழாய் கிணற்றில் பிடித்து  தாக்கியதாலும் காயத்திற்குள்ளான மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனமடுவை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஆனமடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவருக்குமிடையில் தண்ணீர் போத்தல் ஒன்றுக்காகவே சண்டை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .