2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

போதைப்பொருட்களுடன் சிறைச்சாலை அதிகாரி கைது

Editorial   / 2019 நவம்பர் 07 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருட்களுடன் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அகுணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை நுழைவாயிலுக்கு அருகில் குறித்த சிறைச்சாலை அதிகாரியை கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து, 10 கிராம் ஹெரோயின், 14 கிராம் கஞ்சா மற்றும் 27 கிராம் போதைவில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தங்காலை பகுதியைச் சேர்ந்த 32 வயதான சிறைச்சாலை அதிகாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர் இன்று (07) அகுணுகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .