Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 மார்ச் 08 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
இலங்கை - இந்திய கடற்பரப்பை அண்மித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ள விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் பெறுபேறுகளை, அண்மையில் காண முடிந்துள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்தார்.
நேற்று (07) இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், “இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகள் காரணமாக பாரியளவான போதைப்பொருள் கடத்தல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், அதிகளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்டவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு விடயத்தில் இலங்கை கடற்படையினர் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். கடற்படையினரின் நடவடிக்கைகளின் பிரதிபலனை எதிர்வரும் நாட்களிலும் காணமுடியும். போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைளை கடற்படையினரால் முறியடிக்க முடியும். இதற்கான மேலதிக நடவடிக்கைகளை நாங்கள் எதிர்காலத்திலும் முன்னேடுப்போம்.
இலங்கை - இந்திய கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்கும் நடவடிக்கையில் இலங்கை - இந்திய கூட்டு கடற்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படவில்லை. அது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கூட்டு பயிற்சிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியும் என்றும் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
10 minute ago
10 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
16 minute ago