Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண் உள்ளிட்ட ஐந்து பேர், பலாங்கொடை வேவல்வத்த பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வேவல்வத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்த, கல்கந்துர பகுதியில் உள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணின் நண்பிக்கு சொந்தமான குறித்த வீட்டில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், களனிய மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025