2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

புதிய அரசியல் கட்சிகள் பதிவு ஆரம்பம்

Editorial   / 2020 ஜனவரி 17 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்துக்குக் கிடைத்துள்ளதென, அச்சக அதிபர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதம் 16ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை 70 அரசியல் கட்சிகள் ​தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .